16 வருடங்களுக்கு பின் விஜய் இயக்குனரின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Sunday,December 17 2017]

கடந்த 2001ஆம் ஆண்டு விஜய், ரிச்சா பாலோட், விவேக் உள்பட பலர் நடித்த வெற்றித்திரைப்படம் 'ஷாஜஹான்' இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அப்புலு, 16 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்

'செயல்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் வடசென்னை கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் தயாரிப்பாளரின் மகன் ராஜன் ஹீரோவாகவும், கேரளாவை சேர்ந்த புதுமுகம் தேஜேஷ்வர் ஹீரோயினியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் சந்திரா என்பவர் இந்த படத்தில் வில்லனாகவும் அறிமுகமாகிறது. மேலும் முனிஷ்காந்த், ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர்களும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

வடசென்னையை சேர்ந்த தாதா ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் ஹீரோ அடித்துவிடுகிறார். இதனால் அவமானம் அடைந்த அந்த தாதா, ஹீரோவை பழிவாங்க முயற்சிப்பதும், அதில் இருந்து ஹீரோ எப்படி தப்பிக்கின்றார் என்பதும் தான் இந்த படத்தின் கதை. 16 வருடங்களுக்கு பின்னர் நல்ல கதையுடன் களமிறங்கியிருப்பதாகவும், இந்த படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என்றும் இயக்குனர் ரவி அப்புலு நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

More News

5 முறை உலக சாம்பியன் வென்றவரை சந்தித்த பிரபுதேவா

மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவின் பெருமையை உலக அளவில் பறை சாற்றியவர் மேரிகோம்.

'பலூன்' இயக்குனர் சினிஷ் கலாய்த்தது யாரை தெரியுமா?

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள திகில் படம் 'பலூன்' வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

அடுத்த ஆண்டு நானும் ஒரு இயக்குனர்: அரவிந்தசாமி

'தளபதி' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் அரவிந்தசாமி மிக குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார்

'சக்க போடு போடு ராஜா' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள 'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் வரும் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரவுள்ளது. இந்த படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாவதால்

4 வயது சிறுமிக்காக பென்சில் நிறுவனம் எடுத்த நெகிழ வைக்கும் புதிய முயற்சி

பொதுவாக இடதுகை பழக்கம் உள்ளவர்களால் வலதுகை பழக்கம் உள்ளவர்கள் போல் எளிமையாக அனைத்து செயல்களையும் செய்ய முடியாது.