வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட விஜய் பட நடிகை: குழந்தைகள் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Friday,August 19 2022]

விஜய் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கணவர் குழந்தையுடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்ட நிலையில் அவர் குடும்பத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

சரத்குமார் நடித்த ’சமுத்திரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சிந்துமேனன். அதன்பிறகு இவர் விஜய்யின் ‘யூத்’, நந்தாவின் ’ஈரம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சிந்துமேனன் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டனில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முழுக்க முழுக்க லண்டனில் செட்டில் ஆகிவிட்ட சிந்து மேனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவருடைய குழந்தைகளின் புகைப்படங்களை அவர் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.