close
Choose your channels

18 வயதில் நான் உலக அழகி பட்டம் வென்ற போது என் கணவருக்கு 7 வயது: விஜய் பட நடிகை பேட்டி..!

Sunday, May 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை தன்னைவிட 10 வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 18 வயதில் நான் உலக அழகி பட்டம் வென்ற போது என் கணவருக்கு ஏழு வயது என்று தனது மாமியார் கூறியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவர் ஹிந்தியில் பிரபலமானார் என்பதும் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் பிரைமில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நாடியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’18 வயதில் நான் உலக அழகி பட்டம் வென்ற போது என் கணவருக்கு ஏழு வயது தான் என்றும் நான் உலக அழகி பட்டம் என்ற போது என்னை அவர் டிவியில் பார்த்ததாக என் மாமியார் கூறினார் என்றும் தெரிவித்தார். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை என்றும் அந்த பேட்டியில் அவர் மனம் திறந்து கூறியிருந்தார்.

நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment