பாஜக சீட் கொடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: விஜய் பட நடிகை அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,October 30 2022]

பாரதிய ஜனதா கட்சி சீட் கொடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் என இயக்குனர் விஜய் படத்தில் நடித்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்றா படத்தை பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கினார் என்பதும், இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை கங்கனா சமீபத்தில் அளித்த பேட்டியில் பாரதிய ஜனதா கட்சி சீட் கொடுத்தால் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று கூறிய அவர் மாண்டி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்றும் கூறினார்

இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா அவர்கள் கூறியபோது, ‘நடிகை கங்கனா பாரதிய ஜனதா கட்சியில் சேர விரும்பினால் அவரை வரவேற்க தயாராக இருக்கிறோம் என்றும் ஆனால் போட்டியிடுவதற்கு சீட் கொடுப்பது குறித்து கட்சி உறுப்பினர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்’ என்றும் தெரிவித்தார்.


 

More News

மணிரத்னம் பட நடிகையுடன் காதல்.. உறுதி செய்த நடிகர் சித்தார்த்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்த நடிகையுடன் காதல் என நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசீமை அடுத்து ஆயிஷாவை வச்சு செஞ்ச கமல்ஹாசன்: வைரல் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய கமல்ஹாசன் எபிசோடு காரசாரமாக இருந்தது என்பதும் அவர் அசீமை கடுமையாக கண்டித்து எச்சரிக்கை விடுத்தார் என்பதையும் பார்த்தோம்.

விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள்: சென்னையில் மட்டும் இத்தனை லட்சம் அபராதமா?

விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதத் தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டது என்பதும் உயர்த்தப்பட்ட அபராத தொகை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

40 வயதில் குழந்தை பெற்ற 'கோலங்கள்' சீரியல் நடிகை: குவியும் வாழ்த்துக்கள்!

நடிகை தேவயானி நடித்த 'கோலங்கள்' என்ற சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்த நடிகை ஒருவர் 40 வயதில் குழந்தை பெற்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே.. நயன்தாராவை வர்ணித்தவர் யார் தெரியுமா?

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை  வர்ணித்த சமூக வலைதள பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.