உக்ரைன் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் பட நடிகை: வைரல் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் படத்தில் அறிமுகமாகி அதன்பின் உலக அளவில் புகழ்பெற்ற நடிகை உக்ரைன் நாட்டு மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாகவே அந்நாட்டின் மக்கள் அண்டை நாடான போலந்து நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளனர். போலந்து நாட்டில் உள்ள ஒரு சமூக சேவை அமைப்பு அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டு மக்களுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, போலாந்து நாட்டிற்கு சென்று உக்ரைன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் உக்ரைன் மக்களை போலந்து அமைப்புகள் மிகவும் சிறப்பாக கவனித்து வருகின்றன என்றும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளன என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் மக்களை சந்தித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
விஜய் நடித்த ‘தமிழன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Blue Dot Centers play a very necessary role, & in many ways are a rare safe haven for women & especially the children. They offer so much…access to important, relevant information, mental health support, mother and baby areas to allow them much needed privacy…@unicef pic.twitter.com/jFb33iV96C
— PRIYANKA (@priyankachopra) August 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments