close
Choose your channels

தம்பியை போலவே அக்காவுக்கும் அரண்மனையில் தான்.. விஜய் நாயகியின் திருமண ஏற்பாடு!

Monday, October 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் படத்தில் நடித்த நடிகையின் சகோதரர் திருமணம் அரண்மனையில் நடந்த நிலையில் அதே அரண்மனையில் நடிகையின் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. இவர் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்த ‘வேலாயுதம்’, ‘புலி’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி என்பவருக்கு கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு அரண்மனையில் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில் அதே அரண்மனையில் ஹன்சிகாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும், இதற்கான அரண்மனையை அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஹன்சிகாவை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என்றும் இது ஒரு பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றும் கூறப்படுகிறது. ஹன்சிகாவின் திருமண தேதி உள்பட மற்ற விவரங்களை ஹன்சிகாவின் குடும்பத்தினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment