கவினை காதலிக்கின்றாரா விஜய் பட நடிகை? இன்ஸ்டாகிராம் பதிவால் குழம்பிய ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Monday,February 13 2023]

விஜய் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கவின் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இருவரும் காதலிக்கின்றார்களா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

விஜய் நடித்த ’பீஸ்ட்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை அபர்ணாதாஸ், சமீபத்தில் வெளியான கவின் நடித்த ’டாடா’ திரைப்படத்திலும் நாயகி ஆக நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்ததாக விமர்சனங்களும் பாராட்டுக்களும் குவிந்து வரும் நிலையில் இந்த படத்தின் வெற்றி இருவருக்குமே திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை அபர்ணாதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த பதிவில், ‘எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்த கவினுக்கு நன்றி. இந்த படத்தில் நீங்கள் எந்த அளவுக்கு உழைத்தீர்கள் என்பதை நான் நேரில் பார்த்திருக்கின்றேன். அதுமட்டுமின்றி எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொகொண்டு இந்த படத்தில் நீங்கள் நடித்தீர்கள். மேலும் சில பேட்டிகளில் உங்களை கோபமானவர் என்று நான் கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் சரியான விஷயத்துக்கு தான் கோபப்படுவீர்கள் என்பதை தற்போது உணர்கிறேன். ’டாடா’ படத்தில் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கவின் மற்றும் அபர்ணாதாஸ் காதலிக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். கவின் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது லாஸ்லியாவை காதலித்தார் என்று கூறப்பட்ட நிலையில், அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.