மருத்துவமனையில் விஜய் பட நடிகை.. குளுக்கோஸ் ஏற்றும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Tuesday,January 31 2023]
விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனக்கு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு ’கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பிறகு அவர் தெலுங்கில் பிரபலமானார் என்பதும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நடிக்கார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்துவரும் நிலையில் ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இலியானா, கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து அசத்தி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அதில் தன்னை டாக்டர்கள் மிகவும் கவனித்து வருவதாகவும் தனக்கு மூன்று பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனக்கு என்ன பிரச்சனை என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.