கமல் கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய் பட வில்லன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல் கட்சியிலிருந்து விலகிய விஜய் பட வில்லன் இன்று புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் இருந்த பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா இன்று தனிக்கட்சி தொடங்கியுள்ளார்.
கடந்த 1969 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பழ கருப்பையா, அதன் பிறகு 1975 ஆம் ஆண்டில் ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன் பின்னர் ஜனதா கட்சி பிளவு பட்டபோது ஜனதா தளத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.
அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு திமுகவிலும் 1992 ஆம் ஆண்டு மதிமுகவிலும் இருந்த பழ கருப்பையா மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அது பின்னர் 2010ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்து துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்
அதன் பின்னர் மீண்டும் அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் 2016 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் சார்பில் 2021 ஆம் ஆண்டு தி நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் தமிழ்நாடு ’தன்னுரிமை கழகம்’ என்ற அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடித்த ‘சர்கார்’ உள்பட ஒருசில படங்களில் பழ கருப்பையா நடித்துள்ளார் என்பதும், கமல்ஹாசன் நடித்த ‘அந்த ஒரு நிமிடம்’ உள்ளிட்ட ஒருசில படங்களை அவர் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout