விஜய் அரசியல் வருகை.. தாயார் ஷோபா என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,February 02 2024]

தளபதி விஜய் தளபதி அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பதும் தமிழக வெற்றி கழகம் என்று அவர் தனது அரசியல் கட்சியை வெளியிட்டுள்ளார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அவர்கள் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:

விஜய் பற்றி எத்தனையோ கேள்விகளுக்கு நான் சாதாரணமாக பதில் சொல்லி இருக்கிறேன். இன்று அவரது அரசியல் வருகை குறித்து ஒரு அம்மாவாக மட்டுமில்லாமல் சமூக பொறுப்புள்ள பெண்மணியாகவும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று ஒரு தவறான தகவலை நான் சொல்ல மாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் இங்கே அரசியல் பொறுப்பு உள்ளது. அத்தனை குடி மக்களின் அபிமானம் பெற்ற விஜய் மாதிரியான ஆளுமை உள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டியது அவசியம்

புயலுக்கு பின் அமைதி என்று சொல்வார்கள். ஆனால் விஜய்யின் அமைதிக்கு பின் ஒரு அரசியல் புரட்சி நிச்சயம் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. என்ன இருந்தாலும் பையனுக்கு ஓட்டு போகிற அம்மாவாக எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் உள்ளது.

தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்ற மாதிரி தமிழகத்தில் வெற்றி பெறும், முக்கியமாக விஜய்க்கு மதம், சாதி என்பதில் விருப்பம் கிடையாது. அவர் தனக்கு பின்னாடி இருக்கிற எல்லாரும் வாழ்க்கையில் முன்னாடி வரணும் என்று நினைப்பார். தற்போது அவருடைய ரசிகர்கள் தொண்டர்களாக மாறி உள்ளார்கள். கூடிய சீக்கிரம் தலைவர்களாகவும் மாறப் போகிறார்கள்.

விஜய்க்கு பர்சனலாக ஒன்று சொல்ல வேண்டும் என்றால் விஜய் உனக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை, வாழ்த்துக்கள், வெற்றி வாகை சூடு விஜய் என்று ஷோபா தெரிவித்துள்ளார்.