இன்று வெளியான படத்தை பாராட்டிய தளபதி விஜய்யின் அம்மா.. என்ன சொன்னாங்க பாருங்க..!

  • IndiaGlitz, [Friday,September 22 2023]

இன்று வெளியான திரைப்படத்தை தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாராட்டி கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான ’ஆர் யூ ஓகே பேபி’ திரைப்படம் இன்று வெளியானது. இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இன்று இந்த திரைப்படத்தை பார்த்தார்.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’ஆர் யூ ஓகே பேபி’ படம் பார்த்து விட்டு வந்துள்ளேன். லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கிய ஐந்தாவது படம். இந்த படம் நிஜமாகவே மிகவும் டச்சிங்காக இருந்தது. பெரிய வெற்றி அடையும் என்று நான் நம்புகிறேன்.

இந்த விஷயத்தை இவ்வளவு அழகாக அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் அம்மா ’ஆர் யூ ஓகே பேபி’ படம் குறித்து கூறிய இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமுத்திரகனி, அபிராமி, மிஷ்கின், ஆடுகளம் நரேன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவும், பிரேம்குமார் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

More News

யுவனின் மயக்கும் மெலடி.. 'இறைவன்' படத்தின் ஜெயம் ரவி - நயன்தாராவின் பாடல் வீடியோ..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில், அகமது இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'இறைவன்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின்

நீண்ட இடைவெளிக்கு பின் எதிர்பார்த்த தகவல்.. 'துருவ நட்சத்திரம்' படத்தின் சூப்பர் அப்டேட்..!

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ்  ஜெயராஜ் இசையில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு  கடந்த 2015 ஆம் ஆண்டு

இது ரொம்ப ரொம்ப கேவலமானது. நடிகை சாய்பல்லவின் ஆவேச பதிவு..!

நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.

கார்த்தியுடன் மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் பட இயக்குனர்.. மீண்டும் ஒரு வெற்றிப்படமா?

நடிகர் கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' என்ற திரைப்படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்கினார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் 15 கோடி ரூபாய் செலவில்

பொய்ச்செய்தி பரப்பும் பத்திரிகையாளர்கள் களையெடுக்கப்படுவார்கள்: தயாரிப்பாளர்கள்‌ சங்கம்

பொய்ச்செய்தி பரப்பும் பத்திரிகையாளர்கள் களையெடுக்கப்படுவார்கள் என தயாரிப்பாளர்கள்‌ சங்கம் தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ தலைவர்‌ என்‌.ராமசாமி மற்றும்‌ நிர்வாகிகள்‌ ஒரு அறிக்கை