இன்று வெளியான படத்தை பாராட்டிய தளபதி விஜய்யின் அம்மா.. என்ன சொன்னாங்க பாருங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று வெளியான திரைப்படத்தை தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாராட்டி கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான ’ஆர் யூ ஓகே பேபி’ திரைப்படம் இன்று வெளியானது. இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இன்று இந்த திரைப்படத்தை பார்த்தார்.
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’ஆர் யூ ஓகே பேபி’ படம் பார்த்து விட்டு வந்துள்ளேன். லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கிய ஐந்தாவது படம். இந்த படம் நிஜமாகவே மிகவும் டச்சிங்காக இருந்தது. பெரிய வெற்றி அடையும் என்று நான் நம்புகிறேன்.
இந்த விஷயத்தை இவ்வளவு அழகாக அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் அம்மா ’ஆர் யூ ஓகே பேபி’ படம் குறித்து கூறிய இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமுத்திரகனி, அபிராமி, மிஷ்கின், ஆடுகளம் நரேன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவும், பிரேம்குமார் படத்தொகுப்பு செய்துள்ளனர்.
#AreYouOkBaby - Heart-touching & beautiful movie - #ShobaChandrasekhar
— Ramesh Bala (@rameshlaus) September 22, 2023
Film by @LakshmyRamki. In cinemas now
TN release by @WCF2021
An #IsaiGnani @ilaiyaraaja Musical#MonkeyCreativeLabs #Dstudios @thondankani #Abhirami #DirVijay @DirectorMysskin pic.twitter.com/oS7xcBwnRX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com