விஜய்யின் அம்மா ஷோபாவின் முக்கிய அறிவிப்பு; ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் தனது தந்தை இயக்குனர் சந்திரசேகர் மீது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அம்மா ஷோபா மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவர் என்பதும், அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். முதல் டுவிட்டாக அவர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் பதிவு செய்துள்ளார். டுவிட்டரில் இணைந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், எனது அன்பு மகனின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது மேலும் மகிழ்ச்சி ஷோபா தனது டிவிட்டில் பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர். இதனால் இந்த பக்கத்திற்கு ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைந்த நிலையில் அவருக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய பல திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி அவர் ஒரு சிறந்த பாடகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Happy to join twitter! My first pic with my lovable son @actorvijay ! pic.twitter.com/1cAGDTxlAE
— Shoba SAC (@Shobasac) September 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments