ஏற்கனவே நான் ஒரு CM, இனி நானும் ஒரு PM.. மகன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஷோபா..!

  • IndiaGlitz, [Thursday,August 22 2024]

ஏற்கனவே நான் CM, என்றும் இனி நான் PM என்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் இன்று தனது தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார் என்பதும் அதன் பின் அவர் உரையாற்றினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கொடியேற்ற நிகழ்வில் விஜய்யின் தாயார் ஷோபா மற்றும் தந்தையார் எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் விஜய்க்கு அவருடைய தாயார் ஷோபா வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய். நாட்டுக்கே ராஜாவானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (celebrity mother). இனி நானும் ஒரு PM (proud mother)' என கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.