close
Choose your channels

அஜித்துக்கு விஜய் அம்மா கூறிய அறிவுரை

Monday, May 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
'தல' அஜித் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு கோலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இளையதளபதி விஜய்யின் அம்மாவும், பிரபல பாடகியுமான ஷோபா சந்திரசேகர், அஜித்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அஜித் குறித்து எப்போதுமே பெருமையாக கூறிவரும் எஸ்.ஏ.சந்திரசேகர்-ஷோபா தம்பதியினர் அஜித்தை தனது இன்னொரு மகன் என்பதை அடிக்கடி கூறி வருவதும் உண்டு.

இந்நிலையில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஷோபா சந்திரசேகர், 'அஜித்துக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் நீங்கள் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கின்றீர்கள். தற்போது சிகிச்சை பெற்று வருவதால் இனிவரும் படங்களில் அதிக ரிஸ்க் எடுக்காமல் கவனமாக சண்டைக்காட்சிகளில் நடிக்கும்படி ஒரு தாயாக நான் கேட்டு கொள்கிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பூரண நலமுடன் இருப்பது மிகவும் முக்கியம்' என்று கூறியுள்ளார். மேலும் அஜித்தின் பிரியாணியை பலர் ருசித்து சாப்பிட்டதை கேள்விப்பட்டுள்ளேன். அவர் நான் தயாரிக்கும் பிரியாணியை ஒருநாள் குடும்பத்துடன் வந்து சாப்பிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கின்றேன்' என்று கூறியுள்ளார்,
விஜய்யும் அஜித்தும் தொழில் அளவில் வேண்டுமானால் போட்டியாளர்களாக இருக்கலாம். ஆனால் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதும், அவர்களது குடும்பத்தினர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவில் இருப்பதும் இதிலிருந்து தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment