விஜய் மிஸ் செய்த படம்.. சூர்யா நடித்து ஹிட்டான படம்.. இரண்டாம் பாகத்தில் சந்தானமா?

  • IndiaGlitz, [Saturday,July 20 2024]

விஜய் நடிக்க இருந்த ஒரு திரைப்படத்தில் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அந்த படத்தில் சூர்யா நடித்த நிலையில் சூப்பர் ஹிட் ஆன அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு சூர்யா, லைலா, சினேகா நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் உருவான ’உன்னை நினைத்து’ என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தில் முதலில் சில நாட்கள் விஜய் நடித்த நிலையில் விஜய், லைலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

ஆனால் ஒரு சில காரணங்களால் விஜய் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், அதன்பின்னர் சூர்யா இணைந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த படத்தில் சூர்யா நடித்த கேரக்டரில் சந்தானம் நடிகை உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விக்ரமன் விளக்கம் அளித்தபோது ’உன்னை நினைத்து 2’ படத்தின் ஸ்கிரிப்ட் எழுத நான் ஆரம்பித்தது உண்மைதான். ஆனால் பாதிக்கு மேல் அந்த ஸ்கிரிப்ட் வரவில்லை என்பதால் அந்த முயற்சியை நான் கைவிட்டு விட்டேன். அதுமட்டுமின்றி ’சூரிய வம்சம்’ உள்பட எந்த இரண்டாம் பாகத்தையும் இப்போதைக்கு நான் எடுக்கப்போவதில்லை.

’வானத்தைப்போல’ இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்பது பலருடைய ஆசை, ஆனால் அந்த கேரக்டரில் நடிக்க இப்போதைக்கு நட்சத்திரங்கள் யாருமில்லை என்பதால் அந்த முயற்சியையும் கைவிட்டு விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து ’உன்னை நினைத்து’ உள்பட விக்ரமனின் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர் இயக்கப் போவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

தெருக்குரல் அறிவு புதிய இசை ஆல்பம்

தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும்

தனுசு ராசிக்கு ராசி பலன் ஆடி முதல் பங்குனி வரை -பிரபல வேத ஜோதிடர் பிரகாஷ் நரசிம்ஹன்

பிரபல ஜோதிடர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள், யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸ்ஸில் அளித்த பேட்டியில், தனுசு ராசி நேயர்களுக்கான அடுத்த ஆறு மாதங்களுக்கான (ஆடி முதல் பங்குனி வரை) ராசி பலனை கணித்துள்ளார்.

விருச்சிக ராசிக்கு யோகமான ஆறு மாதங்கள்! ஆன்மீக கிளிக்ஸ்ஸில் ஜோதிடர் பிரகாஷ் நரசிம்ஹன் கணிப்பு

பிரபல ஜோதிடர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள், யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸ்ஸில் அளித்த பேட்டியில், விருச்சிக ராசி நேயர்களுக்கான

பெண்களுக்கு எதற்கு திருமணம்? சர்ச்சை பதிவுக்கு விளக்கமளித்த விவாகரத்து பெற்ற நடிகை..!

பெண்களுக்கு திருமணம் எதற்கு என சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த விவாகரத்தான நடிகை ஒருவர் இன்று அந்த பதிவுக்கு மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இவருக்கு பதில் இவர்.. வெளியேறுவது யார்?

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ஏற்கனவே ஒரு சில கேரக்டரில் நடிக்கும் நட்சத்திரங்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஒருவர்