close
Choose your channels

'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜயகாந்துக்கு பதில் யார்? விஜய் மில்டன் கூறுவது என்ன?

Monday, January 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் தற்போது ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜயகாந்தை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவரை நேரில் சந்தித்து ஒரு சில முறை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்ததை அடுத்து அவரால் நடிக்க முடியாது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விஜய் மில்டன் கூறிய போது ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜயகாந்தை நடிக்க வைக்க என்னால் முயன்றவரை முயற்சி செய்தேன். அவரது திரையுலக வாழ்க்கைக்கு அர்ப்பணம் செய்யும் விதமாக அந்த கேரக்டரை உருவாக்கினேன். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக நடிக்க முடியவில்லை. இருந்தாலும் அந்த கதாபாத்திரம் குறித்து அவரிடம் கூறுவதற்காக பலமுறை சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களை நீங்கா நினைவுகளாக என் மனதில் சேமித்து வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜயகாந்த் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டாலும் அவருக்கு பதில் வேறு நடிகர் யாரேனும் நடிப்பார்களா? அல்லது AI டெக்னாலஜி மூலம் விஜயகாந்தை நடிக்க வைக்க முயற்சி எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆபாவாணன் ’ஊமை விழிகள் 2’ படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் விஜயகாந்த் கேரக்டரை AI டெக்னாலஜி மூலம் உருவாக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment