விஜய் மில்டனின் அடுத்த படம் குறித்து சூர்யா தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய விஜய் மில்டன், கடந்த 2014ஆம் ஆண்டு ‘கோலி சோடா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் விக்ரம் நடித்த ’10 எண்றதுக்குள்ள’என்ற திரைப்படத்தையும் ’கோலிசோடா 2’ என்ற படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் விஜய்மில்டன் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என லாக்டவுனுக்கு முன்பே கூறப்பட்டது. இதனை அடுத்து தற்போது இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
விஜய் மில்டன் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு நடிகர் சூர்யா அறிவிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பாரா? அல்லது தயாரிப்பாளரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே விஜய் மில்டன் இயக்கிய ’கடுகு’ என்ற திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Here's wishing @vijaymilton Sir all success for his next film which will be revealed by @Suriya_offl Sir tomorrow at 10 am! https://t.co/udrnHbTTUH
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments