'விவேகம்' விமர்சகரை வெளுத்து வாங்கிய விஜய்மில்டன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமா என்பது ஒரு தொழில். அந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. சினிமாத்துறையில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் தொழிலை தெய்வமாக மதித்துதான் செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சினிமாவை விமர்சனம் செய்யும் தொழிலையே முழு நேரமாக சிலர் செய்து வருகின்றனர்.
ஒரு படத்தை பார்த்து அதன் நிறைகுறைகளை அலசி, நடுநிலையாக விமர்சனம் செய்யும் ஊடகங்கள் மத்தியில் யூடியூப் சேனலில் வீடியோ வடிவில் விமர்சனம் செய்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் பெய்டு விமர்சகர்களாக இருந்து வருவதுதான் பிரச்சனையே. காசு கொடுத்தால் மொக்கை படத்தை கூட சூப்பர் படம் என்றும் காசு கொடுக்காவிட்டால் சூப்பர் படத்தையும் மொக்கை படம் என்றும் விமர்சனம் செய்ய இந்த பெய்டு விமர்சகர்கள் தயங்குவதில்லை
இந்த நிலையில் யூடியூபில் புளுசர்ட் மாறன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக சினிமா விமர்சனம் செய்து வருகிறார். இவர் கடந்த வியாழன் அன்று வெளியான 'விவேகம்' படத்தை படுமோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். இதனால் படக்குழுவினர்களும் அஜித் ரசிகர்களும் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இவருடைய விமர்சனம் குறித்து இயக்குனர் விஜய்மில்டன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியதாவது: சினிமா எடுப்பது என்பது ஒரு குழந்தை செய்வது போன்றது. ஒரு குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம். நாம் என்னதான் நேர்மையாக செயல்பட்டாலும் வெளியே வரும் குழந்தை எப்படி இருக்கும் என்பது நம் கையில் இல்லை. ஆனால் அதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சி நேர்மையானது.
சினிமா என்ற குழந்தையை சரியாக பெற்றெடுக்க வேண்டும் என்ற வித்தையை பாரதிராஜா, பாலசந்தர் உள்பட யாரும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் வெற்றி, தோல்வி என்று மாறி மாறி கிடைத்து வருகிறது. சினிமாவை நம்பி நாங்கள் வியாபாரம் செய்கிறோம், நீங்கள் அதையேதான் செய்து வருகிறீர்கள், அதனால் உங்களது விமர்சனத்தில் மனம் புண்படும் வார்த்தைகளை நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com