கமல் பெரிய ஹிரோன்னு காட்றதுக்காகவே வந்துருக்கு ஜீரோ: பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த 'ஜீரோ' திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளிவந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக ஷாருக்கானின் உயரம் குறைந்த வேடம் காமெடியாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1989ஆம் ஆண்டு வெளியாகிய கமல்ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கமல்ஹாசன் உயரம் குறைந்த வேடத்தில் நடித்தபோது பலர் ஆச்சரியப்பட்டனர். உயரம் குறைந்த வேடம் மிகவும் தத்ரூபமாக எந்த இடத்தில் என்ன டெக்னிக் செய்தார்கள் என்பதை இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு கமல்ஹாசனும், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 'ஜீரோ' படத்தில் படக்குழுவினர் பயன்படுத்திய டெக்னிக் வெட்ட வெளிச்சமாக தெரிவதால் அந்த கேரக்டர் காமெடியாகியுள்ளது. இவ்வளவிற்கும் 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படம் இந்தியில் அப்புராஜா என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல் மற்றும் ஷாருக்கான் நடிப்பை ஒப்பிட்ட பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நம்ம கமல் சார் எவ்ளோ பெரிய ஹீரோன்னு காட்றதுக்கு வந்துருக்கு ஜீரோ என்று குறிப்பிட்டுள்ளார்.
namma kamal sir evlo periya HERO nu kattradhukku vandhurukku ZERO @ikamalhaasan @pcsreeram
— sd.vijay milton (@vijaymilton) December 22, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments