தமிழகம் முழுவதும் வலம் வரும் 'கோலி சோடாவின்' ஜிஎஸ்டி வண்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் அந்த படத்தின் புராமோஷனும் ரொம்ப முக்கியம். நல்ல படங்கள் கூட சிலசமயம் சரியான புரமோஷன் இல்லாததால் தோல்வி அடைந்துள்ளன
இந்த நிலையில் வரும் ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள விஜய் மில்டனின் 'கோலி சோடா 2' திரைப்படத்தின் வித்தியாசமான புரமோஷன் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இந்த படத்தின் விளம்பரத்துடன் கூடிய வண்டியான ஜிஎஸ்டி வண்டி என்று கூறப்படும் வண்டிகள் சென்னை, மதுரை, சேலம், கோவை உள்பட முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்யவுள்ளது. அந்த சமயத்தில் அந்தந்த பகுதி மக்களுக்கு தேவையான சில விஷயங்களை தெரியப்படுத்தினால் இந்த வண்டியில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக சென்னையில் மனவளர்ச்சி குன்றிய காப்பகம் ஒன்றுக்கு தேவையான பொருட்களுடனும், சேலத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான சத்துமாவும் தேவை என தகவல் வந்துள்ளதால் இந்த பொருட்களுடன் ஜிஎஸ்டி வண்டி கிளம்பவுள்ளது. இதேபோல் சமூக அக்கறையுடன் கூடிய தேவையை இந்த வண்டி பூர்த்தி செய்யவுள்ளது.
படத்தின் விளம்பரத்துடன் சமூக சேவையும் கலந்த இந்த புரமோஷனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
சமுத்திரக்கனி, செம்பன் வினோத் ஜோஸ், ரோஹினி, சுபிக்சா, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கோலி சோடா 2' படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com