நள்ளிரவில் தூத்துகுடி சென்ற விஜய்: பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி தூத்துகுடி மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் போராடி வந்த நிலையில் இந்த போராட்டத்தின் 100வது நாளில் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பலியானவர்களின் குடும்பங்களுக்குக் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட ஒருசில திரையுலகினர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் ஆறுதல் கூறினர்
இந்த நிலையில் ரஜினி, கமலை அடுத்து தளபதி விஜய் நேற்றுநள்ளிரவில் தூத்துகுடி சென்றார். தூத்துகுடி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அவர் பலியானவர்களின் இல்லங்களுக்கு சென்று, அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார். எந்தவித முன் அறிவிப்பு, ஆரவாரமின்றி விஜய் தூத்துகுடிக்கு சென்று பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இன்று விஜய், தூத்துகுடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு துப்பாக்கி சூட்டால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments