தெலுங்கு மாநில விஜய் ரசிகர்களுக்கு ஒருநாள் சோகம்

  • IndiaGlitz, [Monday,October 16 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தடைகள் பல கடந்து வெற்றிகரமாக வரும் தீபாவளி தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வரும் அக்டோபர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நற்செய்தியால் உலகம் முழுவதிலும் உள்ள விஜய்யின் தமிழ் ரசிகர்கள் உற்சாகமாக உள்ள நிலையில் விஜய்யின் தெலுங்கு மாநில ரசிகர்களுக்கு மட்டும் ஒருநாள் சோகம் ஏற்பட்டுள்ளது

ஆம், 'மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'அதிரிந்தி' திரைப்படம் தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி தெலுங்கு விஜய் ரசிகர்களுக்கு ஒருசிறிய வருத்தத்தை கொடுத்தாலும் தடையின்றி இந்த படம் வெளிவருவது குறித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் புதிய சாதனையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது. ரிலீசுக்கு முன்னர் யூடியூபில் அதிகமான லைக்ஸ்களை பெற்ற டீசர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ள 'மெர்சல்' ரிலீசுக்கு பின்னர் இன்னும் என்னென்ன சாதனையை ஏற்படுத்தவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கடைசி தடையும் நீங்கியது: மெர்சல் கொண்டாட்டம் ஆரம்பம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் டைட்டில் பிரச்சனை, கேளிக்கை வரி பிரச்சனை ஆகியவற்றை கடந்து வந்த நிலையில் கடைசியாக விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பிரச்சனையையும் சந்தித்தது

'மெர்சல்' பிரச்சனை: டெல்லியில் இருந்து அவசரமாக வருகை தரும் சிறப்பு அதிகாரி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் விஜய் ரசிகர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் டென்ஷன் அதிகமாகி கொண்டே வருகிறது.

இளைஞர்களின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத்

இசைஞானிக்கு ஒரு 'அன்னக்கிளி', ஆஸ்கார் நாயகருக்கு ஒரு 'ரோஜா', அதுபோல் ராக்ஸ்டார் அனிருத்துக்கு ஒரு '3'.

மெர்சல்' படத்தின் கதை கசிந்தது எப்படி?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்து ஏற்கனவே ஒரு வதந்தி இணையதளங்களில் வெளியானது.

ஆயுதபூஜை படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 'ஹரஹர மகாதேவகி'

கடந்த மாதம் ஆயுதபூஜை தினத்தில் பெரிய பட்ஜெட் படமான ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர்' மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்துடன் சின்ன பட்ஜெட் படமான 'ஹரஹர மகாதேவகி' படமும் ரிலீஸ் ஆனது.