ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு: விஜய் திட்டம் என்ன?

  • IndiaGlitz, [Saturday,May 05 2018]

தளபதி விஜய் தற்போது பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய், இன்று தனது ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.

சென்னை அருகேயுள்ள பனையூர் என்ற பகுதியில் விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை விஜய் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது விஜய்யுடன் ரசிகர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இன்று விஜய்யை சந்திக்க வந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் எப்போதும் தனது ரசிகர்களுக்கு மதிப்பு கொடுப்பவர் என்றும், அவ்வப்போது அவர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்வது வழக்கம் என்றும், அதுபோன்ற ஒரு சந்திப்புதான் இந்த சந்திப்பு என்றும், இந்த சந்திப்பில் வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.