ரசிகர்களை சந்திக்க மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய்.. ரசிகர்கள் உற்சாகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இனி அடிக்கடி ரசிகர்களை சந்திக்க போகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை இன்று விஜய் சந்தித்தார்.
அதற்காக அவர் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலத்திற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த நிலையில் அவரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வரவேற்றனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் போட்டி போட்டதால் அந்த அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் அனைத்து நிர்வாகிகளுக்கும் பிரியாணி உணவு பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இனி அடிக்கடி விஜய் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க இருப்பதாகவும் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Watch | மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்திற்கு மாஸாக எண்ட்ரி கொடுத்த நடிகர் விஜய்!#SunNews | #Vijay | #Varisu pic.twitter.com/9iGclilHqY
— Sun News (@sunnewstamil) November 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com