விஜய்-வினோத் திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

கார்த்தி நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்த படத்திற்காக இயக்குனர் H.வினோத் செய்த ஹோம் ஒர்க்கை அனைவரும் பாராட்டினர்.

இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய், இயக்குனர் வினோத்தை அழைத்து பேசியதாகவும், 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் வினோத்திடம் தனக்கு ஏற்ற கதை இருந்தால் சொல்லுங்கள், இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று விஜய் கூறியதாகவும் தெரிகிறது.

எனவே இயக்குனர் வினோத் தற்போது விஜய்க்காக ஒரு மாஸ் கதையை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மோகன்ராஜாவை சமீபத்தில் விஜய் சந்தித்து பேசிய நிலையில் 'விஜய் 63' படத்தை இயக்க போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது.