10,12ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்கிறார் விஜய்.. இடம், தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை தளபதி விஜய் நேரில் சந்தித்து பரிசுகளை அளிக்க இருப்பதாக செய்தி வெளியானது.
இந்த நிகழ்ச்சி நடக்கும் தேதி, இடம் ஆகியவை விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் விஜய் மக்கள் இயக்கம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கு இணங்க வருகின்ற ஜூன் 17ஆம் தேதி சனிக்கிழமை அன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு தளபதி விஜய் அவர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments