close
Choose your channels

தமிழ்நாட்டில் நல்ல தலைவர்கள் வேண்டும்.. ஆளும் அரசு செய்ய தவறிவிட்டது: விஜய் பேசிய அரசியல்..!

Friday, June 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் இன்று 10,12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசு தரும் நிகழ்ச்சியை நடத்திய நிலையில் அதில் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:

மீண்டும் உங்களை சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, இது போன்ற நிகழ்வுகளில் நல்ல விஷயங்களை தான் பேச வேண்டும், அடுத்த கட்ட படிப்புக்கு எந்த துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்து நல்ல துறையை தேர்வு செய்யுங்கள்.

தமிழ்நாட்டில் டாக்டர், இன்ஜினியர், வக்கீல்கள் இருக்கிறார்கள், ஆனால் நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை, அரசியல் மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை, நன்கு படித்தவர்கள் தான் தலைவராக வரவேண்டும், எதிர்காலத்தில் அரசியலும் ஒரு வேலை வாய்ப்பு என மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மாணவர்கள் தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும், அப்படி படித்தால் செய்தி வேறு, கருத்துருவாக்கம் வேறு என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். சமூக வலைதளங்களில் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் பேசி வரும் நிலையில் நீங்கள் அனைத்தையும் பார்த்து அதில் எது உண்மை, எது பொய் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்படி தெரிந்து கொண்டாலே அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் தற்போது போதைப்பொருள் அதிகமாகிவிட்டது எனக்கே அச்சமாக இருக்கிறது, போதை பொருளை அரசு கட்டுப்படுத்த வேண்டும், ஆனால் அரசு அதை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்பதை பேசும் மேடை அல்ல இது, அரசை நம்பாமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும், சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விஜய் பேசினார்.

இறுதியாக வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையில் சகஜம், வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி தொடர்கதை அல்ல, நீங்கள் அனைவரும் நன்றாக படித்து முன்னேற எனது வாழ்த்துக்கள்’ என்று விஜய் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos