இளையதளபதியின் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள்

  • IndiaGlitz, [Wednesday,September 09 2015]

இளையதளபதியின் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள்

தமிழ் சினிமாவில் பஞ்ச் டயலாக் என்ற கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய 'இது எப்படி இருக்கு' டயலாக்கில் இருந்து 'சும்மா அதிருதுல்ல' வரை அனல் பறக்க வைத்த பஞ்ச் வசனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினியை பின்பற்றி பல நடிகர்கள் தங்கள் படங்களில் பஞ்ச் டயலாக்குகளை பேசி வந்தாலும், மிகப்பொருத்தமாக பொருந்தியது இளளயதளபதி விஜய்க்கு மட்டும்தான் என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்ட உண்மை. விஜய் பேசிய ஒவ்வொரு பஞ்ச் டயலாக்கும் இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இங்கு விஜய் பேசிய பத்து சூப்பர் பஞ்ச் டயலாக் குறித்து பார்ப்போம்.

'எங்களுக்கு நண்பன்னா தோள்ல்ல கைபோடவும் தெரியும், எதிரின்னா தோலை உரிக்கவும் தெரியும்'

விஜய் முதன்முதலில் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பித்தது 'திருமலை' படத்தில்தான். அந்த படத்தில் 'எங்களுக்கு நண்பன்னா தோள்ல்ல கைபோடவும் தெரியும், எதிரின்னா தோலை உரிக்கவும் தெரியும்' என்று ஆரம்பித்த பஞ்ச் டயலாக் இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்த படத்தில் விஜய் பேசும் பாதி வசனங்கள் பஞ்ச் டயலாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்

விஜய் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் குறிப்பிடத்தக்க படம் 'போக்கிரி'. பிரபுதேவா இயக்கத்தில் பாட்டு, நடனம், ஆக்சன், ரொமான்ஸ், பஞ்ச் டயலாக் என அனைத்துமே சிறப்பாக அமைந்த ஒரு படம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்ற பஞ்ச் டயலாக் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

பூமிக்குள்ள போனவன் புழுதியில் இருந்து வர்றான்னு பாக்குறியா..புயல் எப்போதும் புழுதியில் இருந்து தாண்டா வரும்

விஜய்யுடன் 'கில்லி' படத்தில் இணைந்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் தரணி, மீண்டும் விஜய்யுடன் இணைந்த படம் 'குருவி; இந்த படத்தில் இடம்பெற்ற'பஞ்ச் டயலாக் தான் 'பூமிக்குள்ள போனவன் புழுதியில் இருந்து வர்றான்னு பாக்குறியா..புயல் எப்போதும் புழுதியில் இருந்து தாண்டா வரும்' அட்டகாசமான இந்த வசனம் தியேட்டரில் ஒலித்தபோது கைதட்டல் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன். நீ வேற காட்டு காட்டுன்னு சொல்றே. காட்டாம இருந்தா நல்லா இருக்குமா?

ஜெயம் ராஜா இயக்கிய வேலாயுதம் படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனம் இது. ஒரு ஸ்டண்ட் காட்சிக்கு முன்னர் வரும் இந்த பஞ்ச் வசனம் மிகவும் பிரபலமானது. விஜய்யின் பஞ்ச் வசனங்களில் மிகவும் பிரபலமான வசனங்களில் இதுவும் ஒன்று

மெயினு பேசும்போது சைடு எல்லாம் சைலண்ட்டா இருக்கணும், சவுண்டு வந்துச்சு சங்கறுத்துருவேன்

விஜய் நடித்த 'சுறா' படத்தில் இடம்பெற்ற வசனம் இது. இந்த படம் தோல்வி அடைந்தாலும், இந்த வசனம் பிரபலம் ஆனது. இந்த படத்திற்கு பின்னர் இதே போன்ற பஞ்ச் வசனம் பல படங்களில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் எதிர்ப்பு எங்க இருக்குதோ அங்க சிக்சர் அடிச்சுட்டு செண்டர்ல்ல சேரை போட்டு உட்கார்றதுதான் நம்ம பழக்கமே

விஜய், த்ரிஷா நடித்த ஆதி படத்தில் இடம்பெற்ற வசனம் இது. பிரபல கன்னட நடிகர் சாய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்தில் அவருக்கு முன் விஜய் ஆவேசமாகவும் நக்கலாகவும் பேசிய வசனம் இது. சீரியஸ்+காமெடி கலந்த பஞ்ச் வசனங்களில் இதுவும் ஒன்று

நான் கான்வெண்ட்ல படிச்சிட்டு வந்த கலெக்டர் இல்லடா, கார்ப்பரேஷன் ஸ்கூலு. அறுத்துறுவேன் சங்கை...

விஜய் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்த 'மதுர' படத்தில் இடம்பெற்ற வசனங்களில் ஒன்று. ஆவேசமாக இந்த படத்தில் வில்லனாக நடித்த பசுபதியின் முன் விஜய் பேசிய இந்த வசனம் பலத்த கைதட்டலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏரியா அந்த ஏரியா அந்த இடம்..இந்த இடம்..எங்கேயுமே எனக்கு பயம் கிடையாதுடா...ஏன்னா ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா....

விஜய் நடித்த பெஸ்ட் படம் என இன்றளவும் கூறப்பட்டு வரும் படம் கில்லி. இப்போதும் ஏதாவது ஒரு ஆக்சன் படம் வந்தால் கில்லி மாதிரி இருக்குமா? என்றுதான் பலர் கேட்பார்கள். அந்த அளவுக்கு மக்களின் மனதில் பதிந்த 'கில்லி' படத்தில் இடம்பெற்ற வசனம்தான் இது.

பொறுக்கிங்கள அழிக்க நீங்க நினைச்சா முடியும். நினைக்க மாட்டீங்க....ஆனா இந்த கிரி நினைச்சிட்டான்..முடிச்சிருவாண்டா....

இயக்குனர் பேரரசு இயக்கிய 'திருப்பாச்சி' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் வசனம் இது. போலீஸ் நண்பன் முன் சென்னையில் நடக்கும் அட்டுழியங்களை தனி ஆளாய் நிறுத்திய விஜய் கேரக்டரால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

பணக்காரன் யூஸ் பண்ற ஒரு காண்டம்ல்ல ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் வேணும்ன்னா ஒரு ஏழை குழந்தை தன்னுடைய வாழ்க்கையில ஸ்ட்ராபெர்ரியை நினைச்சு பார்க்க முடியுமா

சமூக அக்கறையுடன் எழுதப்பட்டிருந்த இந்த பஞ்ச் வசனங்கள் ஆயிரம் அர்த்தம் கூறும் வசனமாக 'கத்தி' படத்தில் அமைந்தது. அதுவும் அந்த வசனத்தை விஜய் பேசியதால் பலரது மனதில் இந்த வசனம் பதிந்தது. 

விஜய்யின் பஞ்ச் டயலாக் பற்றி எழுதிக்கொண்டே போனால் அதற்கு ஒரு முடிவே இல்லை. அந்த அளவுக்கு ஏராளமான பஞ்ச் வசனங்களை அவர் பேசியுள்ளார். விரைவில் வெளியாகவிருக்கும் 'புலி' படத்தில்கூட 'பாசத்துக்கு முன்னாடிதான் நான் பனி...பகைக்கு முன்னாடி நான் புலி' என்ற பஞ்ச் வசனம் இருந்ததை டிரைலரில் பார்த்தோம். எனவே விஜய் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் வரை பஞ்ச் வசனங்களும் வந்து கொண்டே இருக்கும் என்பது மட்டும் உறுதி..

உங்களுக்கு மிகவும் பிடித்த இளையதளபதியின் பஞ்ச் டயலாக் எது ? இங்கே பகிரவும்