'லியோ' ஆடியோ விழாவில் ஒரு சர்ப்ரைஸ்.. விஜய்யின் மாஸ் திட்டம் இதுவா?
- IndiaGlitz, [Friday,April 21 2023]
தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’ . இந்த படத்தின் நீண்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்றது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, மிஷ்கின் சஞ்சய்தத், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் இதனை அடுத்து பல குழுவினர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்யின் ஒவ்வொரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ’லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையை தாண்டி தென் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு நகரில் வைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.
ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர், தீரன் சின்னமலை சிலைகளுக்கு மாலை அணிவித்து வருவதால் விஜய், அரசியலில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையை தாண்டியுள்ள ரசிகர்களை நேரில் சந்திக்க ’லியோ’ திரைப்பட ஆடியோ விழாவை தென்மாவட்டத்தில் வைக்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் இந்த மாஸ் திட்டத்தால் தென்மாவட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். அனிருத் இசையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.