விஜய்மல்லையா ஒரு திருடன்: லண்டனில் கோஷமிட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Monday,June 12 2017]

பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டு அதனை கட்டாமல் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து பணத்தை மீட்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியை பார்க்க விஜய்மல்லையா தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கின்றார். பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டியை காணவந்த விஜய்மல்லையா நேற்று லண்டனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியையும் பார்ப்பதற்காக மைதானத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்

அப்போது மைதானத்திற்கு வெளியே நின்றிருந்த இந்திய ரசிகர்கள் விஜய்மல்லையாவுக்கு எதிராக கோஷமிட்டனர். விஜய்மல்லையா ஒரு திருடன் என்றும், மைதானத்தை விட்டு வெளியே போ என்றும் அவர்கள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும் இந்திய ரசிகர்களின் கோஷத்தை கண்டுகொள்ளாமல் விஜய்மல்லையா மைதானத்திற்கு சென்று போட்டியை ரசித்து பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரம்பிரபுவின் 'சத்ரியன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

விக்ரம்பிரபு, மஞ்சிமாமோகன் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'சத்ரியன்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனத்தை பெற்றபோதிலும் தமிழகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

பாகுபலி 2: 7வது வாரத்திலும் எழுச்சிமிகு வசூல். ரூ.20 கோடியை நெருங்கிய 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்பட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.1700 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியில் தொழிலாளி உயிரிழப்பு

சில வாரங்களுக்கு முன் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரம்மாண்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

தினகரன் பின்னால் எம்.எல்.ஏக்கள் செல்வது ஏன்? துக்ளக் ஆசிரியர் விளக்கம்

திஹார் ஜெயிலில் இருந்து ஜாமீன் பெற்று திரும்பி வந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுமார் 30 எம்.எல்.ஏக்கள் சென்றுள்ளதால் தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் பஞ்ச் டயலாக்கை நடைமுறையில் செய்து காட்டிய விஜய்சேதுபதி

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தில் இடம்பெற்ற ஒரு பஞ்ச் டயலாக் 'இன்னைக்கு நிறைய...