விஜய்மல்லையா ஒரு திருடன்: லண்டனில் கோஷமிட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டு அதனை கட்டாமல் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து பணத்தை மீட்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியை பார்க்க விஜய்மல்லையா தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கின்றார். பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டியை காணவந்த விஜய்மல்லையா நேற்று லண்டனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியையும் பார்ப்பதற்காக மைதானத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்
அப்போது மைதானத்திற்கு வெளியே நின்றிருந்த இந்திய ரசிகர்கள் விஜய்மல்லையாவுக்கு எதிராக கோஷமிட்டனர். விஜய்மல்லையா ஒரு திருடன் என்றும், மைதானத்தை விட்டு வெளியே போ என்றும் அவர்கள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும் இந்திய ரசிகர்களின் கோஷத்தை கண்டுகொள்ளாமல் விஜய்மல்லையா மைதானத்திற்கு சென்று போட்டியை ரசித்து பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com