தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது: ஆனால் என்ன பிரயோசனம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி கட்டாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச்சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் லண்டனில் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர். எனவே அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று நம்பிக்கை பிறந்த நிலையில் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் மோசடி வழக்கு ஒன்றில் விஜய் மல்லையாவை லண்டன் போலீசார் இன்று மீண்டும் கைது செய்தனர். ஆனால் வழக்கம் போல் கைது செய்யப்பட்ட ஒருசில மணி நேரங்களில் அவருக்கு மீண்டும் ஜாமீன் கிடைத்துவிட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்பதால் ஜாமீன் அளித்ததாக லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கில் கடன் வாங்கிய விவசாயி கடனை கட்டாவிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கும் வங்கி நிர்வாகம் மற்றும் அரசுகள், கோடிக்கணக்கில் கடன்வாங்கி கடனை திருப்பி கட்டாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவருக்கு எதிரான ஆதாரத்தை சமர்ப்பிப்பதில் என்ன சிக்கல் என்பது புரியாத புதிராக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments