கைது செய்யப்பட்ட 3 மணி நேரத்தில் ஜாமீன் பெற்ற விஜய்மல்லையா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி இந்திய வங்கிகளில் கடன் பெற்று, அதை திரும்ப கட்டாமல் கடந்த ஆண்டு லண்டனுக்கு சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் செய்த நிலையில் இன்று அவர் ஸ்காட்லாந்துயார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்றே மணி நேரத்தில் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்றே மணி நேரத்தில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றுவிட்டதால் அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments