விஜய் பிறந்த நாள் குறித்து விஜய் மக்கள் இயக்கம் முக்கிய அறிவிப்பு

தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஒவ்வொரு ஜூன் மாதம் 22ஆம் தேதி அவரது ரசிகர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் இந்த ஆண்டு அவருடைய பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாட ஏற்கனவே அவரது ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். மேலும் தன்னுடைய பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று விஜய் தரப்பிலிருந்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரனோ தாக்கம் வீரியமாக அதிகமாகி வரும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எந்த ஒரு கொண்டாட்டங்கள், நலத்திட்டங்கள், மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள் என எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல் பாதுகாப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படி மக்கள் இயக்கம் மாநில பொருப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்

எனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒன்றிய, தொகுதி, நகரம் பகுதி மற்றும் வார்டு இளைஞரணி மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தளபதி அவர்களின் அறிவுரையை பின்பற்றி நடக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

சன் டிவிக்கு சென்றது யோகிபாபுவின் அடுத்த படம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு ஒரே நேரத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

2000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு: சென்னையில் வழக்கம்போல் உச்சம்

தமிழக அரசின் சுகாதாரத்துறை கொரோனாவுக்கு எதிராக பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அரசுக்கு மட்டுமின்றி

அழகான படைப்புகள் என்றும் நின்று போவதில்லை: பிகினி போஸ் கொடுத்த தமிழ் நடிகையின் கேப்ஷன்

அழகான படைப்புகள் என்றும் நின்று போவதில்லை, அவளின் சிறகுகள் முளைத்து வானில் இடம் தேடி பறக்க சென்றுவிடும் என்ற கேப்ஷனுடன் பிகினி போஸ்ட் கொடுத்த தமிழ் நடிகையின் புகைப்படம்

8 மணி நேர பயணம்: கொரோனா நோயாளியை அழைத்து சென்ற பெண் ஆட்டோ டிரைவர் 

கொரோனாவில் இருந்து குணமான பெண் ஒருவரை தனது ஆட்டோவில் 8 மணி நேரம் பயணம் செய்து அழைத்துச் சென்று அவருடைய இல்லத்திற்கு கொண்டு சென்ற பெண் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு வாழ்த்துக்கள்

ஊரடங்கு நேரத்தில் 10 ஆண்டு கால நண்பரை திருமணம் செய்த பிரபல நடிகை!

இந்த ஊரடங்கு நேரத்திலும் வெகு அரிதாக ஒரு சில திருமணங்கள் எளிமையாக நடந்து வரும் நிலையில் பிரபல நடிகை ஒருவரின் திருமணம் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் உள்ளாகிவிட்டது