அம்பேத்கரிடம் இருந்து தொடங்குகிறதா அரசியல்? விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் தற்போது ஒரு சமூக இயக்கமாக இயங்கி வருகிறது என்பதும் இந்த இயக்கத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்காலத்தில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவாகும் என்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகள் கூடி ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த கூட்டத்திற்கு புஸ்ஸி ஆனந்த் தலைமை வகிப்பார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் 132 வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவாக இருக்கும் விஜய் மக்கள் இயக்கம் அம்பேத்கரிடம் இருந்து தனது அரசியல் பணியை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments