விஜய் மக்கள் இயக்கத்தின் இரவு நேர பாடசாலை தொடங்குவது எப்போது? புதிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பாடசாலை தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
தளபதி விஜய் பிறந்தநாளில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்த போது ’விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இரவு நேர பாடசாலை தொடக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளி சென்று படிக்க முடியாத ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இந்த இரவு பாடசாலையில் பாடங்கள் எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
ஒரு அரசாங்கத்துக்கு இணையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த இரவு நேர பாடசாலை தொடங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாளான அதாவது ஜூலை 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே குருதியகம், விழியகம், விருந்தகத்தை நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தற்போது மாணவர்களுக்கான இரவு நேர பாடசாலையையும் தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments