அரியலூர் மாணவி ரங்கீலா கல்விக்கட்டணம். விஜய் ரசிகர்களின் அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
அரியலூர் மாணவி ரங்கீலாவுக்கு ஆயுர்வேத படிப்பு படிக்க நிதியுதவி செய்வதாக கூறி பின்னர் ஏமாற்றிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட செய்தி கடந்த இரண்டு நாட்களாக பரபரப்புடன் இருந்தது அனைவரும் அறிந்ததே
இதற்கு விஜய் நற்பணி இயக்கத்தின் சார்பில் ஒரு நீண்ட விளக்கம் கொடுத்ததோடு மாணவி ரங்கீலாவுக்கு உதவி செய்ய இயக்கம் தயாராக இருப்பதாக கூறப்பட்டதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் மாணவி ரங்கீலாவுக்கு ஆயுர்வேத படிப்பு படிக்க ரூ.1.5 லட்சம் கட்டணத்தை இன்று விஜய் நற்பணி இயக்கத்தினர் கட்டியுள்ளதாக புகைப்பட ஆதாரத்துடன் கூறிய செய்தி சற்றுமுன் சமூக இணையதளங்களில் வெளிவந்துள்ளது.
விஜய் நற்பணி இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் கொடுத்த பொய்யான வாக்குறுதியையும் நிறைவேற்றி ஒரு மாணவியின் கல்விக்கு உதவி செய்த விஜய் நற்பணி மன்றத்தினர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout