வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர்கள்: வைரலாகும் குரூப் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 169 பேர் போட்டுயிட்டார்கள் என்பதும் அதில் 129 பேர் வெற்றிப் பெற்றார்கள் என்ற செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். மேலும் வெற்றி பெற்ற 129 பிரதிநிதிகள் சமீபத்தில் பையனூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் சென்று விஜய்யை சந்தித்தார்கள் என்பதையும் அவர்கள் அனைவருக்கும் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு தளபதி அவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
வெற்றிவாகை சூடிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தளபதி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க, மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனைத் தீர்க்கும் நல்வாழ்வு பணியினை தளபதி அவர்களின் உத்தரவுப்படி செவ்வனே செயல்படுத்தி மக்களின் பணியை தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெற்றிபெற்ற 129 பிரதிநிதிகள் விஜய்யுடன் குருப்பாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com