234 தொகுதிகளிலும் தயார்.. விஜய்யின் அடுத்த அதிரடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட இரத்ததான மையம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக் உட்பட பல நல்ல விஷயங்கள் பொது மக்களுக்கு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக விஜய் நூலகம் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விரைவில் விஜய் நூலகம் அமைய இருப்பதாகவும் இந்த நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நூலகம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூலகத்தில் தமிழர்கள் வரலாறு குறித்த நூல்கள், அரசியல் தலைவர்கள், தேசிய தலைவர்கள் குறித்த நூல்கள் உட்பட பல்வேறு நூல்கள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் நூலகம் அமைய இருப்பது உண்மையில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு நல்ல விஷயம் என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments