234 தொகுதிகளிலும் தயார்.. விஜய்யின் அடுத்த அதிரடி..!

  • IndiaGlitz, [Monday,November 13 2023]

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட இரத்ததான மையம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக் உட்பட பல நல்ல விஷயங்கள் பொது மக்களுக்கு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக விஜய் நூலகம் அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விரைவில் விஜய் நூலகம் அமைய இருப்பதாகவும் இந்த நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த நூலகம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூலகத்தில் தமிழர்கள் வரலாறு குறித்த நூல்கள், அரசியல் தலைவர்கள், தேசிய தலைவர்கள் குறித்த நூல்கள் உட்பட பல்வேறு நூல்கள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் நூலகம் அமைய இருப்பது உண்மையில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு நல்ல விஷயம் என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

பிரியங்கா உபேந்திராவின் பரிசோதனை முயற்சி திரைப்படம்.. ரிலீசுக்கு தயார்

கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா, உலகிலேயே முதல் முறையாக முழுவதும் சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை

ராதிகா குமாரசாமி - ரமேஷ் அரவிந்த்தின் 'பைரதேவி' டீசர் ரிலீஸ்..!

பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது நடித்து வரும் பைராதேவி என்கிற

'அஜாக்ரதா'பான் இந்திய படத்தில் ராதிகா குமாரசாமியின் கதாபாத்திர போஸ்டர் ரிலீஸ்..!

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் பான் இந்திய படமான 'அஜாக்ரதா'வில் ராதிகா குமாரசாமியின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது

எங்க அம்மா அப்பவே சொன்னாங்க.. மாயாவிடம் புலம்பும் பூர்ணிமா..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஐஷு எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது  எபிசோடு பார்த்த அனைவரும் தெரிந்ததே. 

சூர்யாவின் 'கங்குவா' தீபாவளி போஸ்டர்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.