அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

தமிழகத்தில் எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் முதல் நபராக உதவிக்கு வருபவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்ததே.

இதற்கு முன்னர் ஏற்பட்ட புயல், வெள்ளம் உள்பட பல்வேறு இயற்கை பேரிடரின் போதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தான் முதலில் முன்வந்து பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

படுக்கை வசதியில்லாமல் பலியான மூதாட்டி...! கலவரத்தில் ஈடுபட்ட உறவினர்கள்...!

டெல்லியில் படுக்கை வசதி இல்லாததால்  உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்தினர், மருத்துவமனையிலே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

உயிர் பயத்தில இருக்கேன்...இது வேறயா...? வீடியோ வெளியிட்டு கதறும் இளைஞர்...!

"நாள் முழுக்க நானே, உயிர் பயத்தில இருக்கேன், இதுல இது வேறயா' என இளைஞர் வெளியிட்ட வீடியோ, பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க செய்கின்றது.

தேசிய சாம்பியன்ஷிப் ரோலர் ஸ்கேட்டிங்: சென்னை மாணவி லக்‌ஷிதா சாதனை

ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சென்னையை சேர்ந்த மாணவி லக்‌ஷிதா தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார் 

தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது