நான் உயிரோடு இருப்பது பிடிக்கவில்லையா? எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விரைவில் பாஜகவில் சேர இருப்பதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வதந்திக்கு ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பாஜகவில் இணைகிறீர்களா? என்ற மீண்டும் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு எஸ்ஏ சந்திரசேகரன் காட்டமாக, ‘நான் உயிரோடு இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்ரு பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் ’நான் பாஜகவில் இணைய போகிறானா என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது என்றும் அந்த அமைப்பு ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்றும், அந்த அமைப்பு தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என்றும் கூறினார்.
மக்கள் அழைக்கும்போது சக்தி வாய்ந்ததாக ’விஜய் மக்கள் இயக்கம்’ அமைப்பு இருக்கும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
#BREAKING | மக்கள் அழைக்கும் போது விஜய் அரசியலுக்கு வருவார் - எஸ்.ஏ.சந்திரசேகர் #ActorVijay | #Vijay | #SAChandrasekhar | @actorvijay pic.twitter.com/HeU7Jckcmy
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments