தப்பாட்ட கலைஞர்களுக்கு உதவிய விஜய் ரசிகர் மன்றத்தினர் 

கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் மத்திய மாநில அரசுகள் மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு என மொத்தம் 1.30 கோடி ரூபாய் நிதி உதவி செய்த தளபதி விஜய், பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூபாய் 5000 அனுப்பி உள்ளார் என்பது குறித்த செய்தியையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஏற்கனவே பொதுமக்கள், காவல்துறையினர், ,சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு விஜய் ரசிகர்கள் அவ்வப்போது உதவிகளை செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் வசிக்கும் தப்பாட்ட கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களுக்கும் விஜய் ரசிகர்கள் உதவி செய்துள்ளனர்.

வருடத்திற்கு நான்கு மாதங்கள் மட்டுமே வருமானம் கிடைக்கும் தப்பாட்ட கலைஞர்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக வெளியான செய்தியை பார்த்த விஜய் மக்கள் மன்ற இயக்கத்தினர் உடனடியாக 20 குடும்பங்களைச் சேர்ந்த தப்பாட்ட கலைஞர்களுக்கு உதவி செய்தனர். அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் ஆகியவற்றை அடங்கிய பையை கொடுத்ததாகவும், இதற்கு தப்பாட்ட கலைஞர்கள் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

இன்று முதல் ஊரடங்கு உத்தரவு தளர்வு: எந்தெந்த கடைகள் திறக்கலாம்!

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை உள்ள கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லாக்டவுன் நீடித்தால் 4 கோடி இந்தியர்களின் மொபைல் போன்களுக்கு ஆபத்து! அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் லாக்டவுன் மே 3ஆம் தேதிக்கு பின்னர் நீட்டித்தால் 4 கோடி இந்தியர்களின் மொபைல் போன்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இது முழுக்க முழுக்க பொய்: ஜோதிகா விவகாரம் குறித்து விஜய்சேதுபதி!

நடிகை ஜோதிகா சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வரும் நிலையில்

பசியோடு அழும் சிறுமியின் வீடியோ: உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது தாயார் தினந்தோறும் விதவிதமாக காய்கறிகளுடன் கூடிய குழம்பு வைத்து சோறு கொடுப்பார்கள் என்றும் ஆனால் தற்போது காசு இல்லாததால்

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்!!! எச்சரிக்கும் ஐரோப்பிய மருந்து நிறுவனம்!!!

கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.