உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தினர் இருவர் போட்டியின்றி தேர்வு!

  • IndiaGlitz, [Thursday,September 23 2021]

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி, பஞ்சாயத்து தலைவர் பதவி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி உள்ளிட்ட 16 இடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடந்து வரும் நெல்லை மாவட்டம் சிறுவனஞ்சி கிராமம் 5வது வார்டில் வேட்புமனுத் தாக்கல் செய்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ராஜகுமாரி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் திங்கள் அன்று வெளியிடப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தென்காசி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

யோகிபாபு-ஓவியா படத்தின் டைட்டில் அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவுடன் பிரபல நடிகை ஓவியா இணைந்து ஒரு படத்தை திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சமந்தாவுடன் விவாகரத்து: முதல்முறையாக விளக்கமளித்த நாகசைதன்யா!

பிரபல நடிகை சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய உள்ளார் என வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது தெரிந்ததே.

பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடும் தீபிகா படுகோன்: வெற்றி பெற்றது யார்?

பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து அவர்கள் சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது தெரிந்ததே

நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி: 'வலிமை' வீடியோ

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்

ஆயுதபூஜை ரிலீஸ் பட்டியலில் இணைந்த மேலும் ஒரு படம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் தான் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது