நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விஜய் காட்டிய பச்சைகொடியால் ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்று சாதனை செய்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்க முடிவு செய்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட விஜய்யிடம் இருந்து அனுமதி கிடைத்து விட்டதாகவும், அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும், விஜய்யின் படம் மற்றும் விஜய் மக்கள் இயக்க கொடியை தேர்தலுக்கு பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தல் போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அடுத்து விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த இலக்கு சட்டமன்ற தேர்தல் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments