600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு விஜய் ரசிகர்கள் நேரில் வாழ்த்து: வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

நேற்று வெளியான பிளஸ் டூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி நந்தினி என்பவர் சாதனை செய்துள்ள நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் உட்பட பலர் பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வில் மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் கணக்கு பயன்பாட்டியல் ஆகிய ஆறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு பேர்களில் நந்தினியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாணவி நந்தினிக்கு தமிழக முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

உடலில் சேற்றை பூசிக்கொண்டு தோழிகளுடன் ஜாலியான ஆட்டம்.. பிரபல நடிகரின் மனைவி புகைப்படங்கள்..!

பிரபல நடிகரின் மனைவி சமீபத்தில் ஜோர்டான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் அங்கு தனது தோழிகளுடன் உடலில் சேற்றை பூசிக் கொண்டு ஜாலியாக இருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

த்ரிஷாவின் காதலருடன் டேட்டிங் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை பேட்டி..!

த்ரிஷாவின் காதலருடன் டேட்டிங் செய்தது உண்மைதான் என பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அட இதாங்க மனசு… விலங்கு பாதுகாப்பு குறித்து இன்ஸ்டாவில் பாடம் எடுத்த பாலிவுட் நடிகை!

கோடை காலத்தில் பறவை, நாய், பூனை போன்ற விலங்கினங்கள் தண்ணீருக்காக படும்பாடு சொல்லிமாளாது.

பூஜாவுக்கு பாட்டு போட்டே விருது வாங்கிவிட்ட டிஜே பிளாக்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பூஜாவுக்கு என்று ஸ்பெஷல் ஆக பாட்டு போட்டு டிஜே பிளாக் விஜய் டிவி விருதை பெற்றுவிட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கண்ணாடிக்குள் அழகு தேவதை… பிரியங்கா அருள்மோகனின் வித்தியாசமான போட்டோஷுட்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே க்யூட்டான சிரிப்பின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா அருள்மோகன் புதிய போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.