விஜயகாந்த் மறைவு தினத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவம்: விஜய் மக்கள் இயக்கம் போலீசில் புகார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜயகாந்த் மறைவு தினத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்று இருந்தார். அஞ்சலி செலுத்தி விட்டு அவர் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவர் மீது காலணி வீசப்பட்டது. இந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தியாகராய நகர் மாவட்ட தலைவர் அப்பனு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ’கடந்த மாதம் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10.30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்து இருந்தார்.
தளபதி விஜய் அவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலனியை கழற்றி தளபதியை நோக்கி எறிந்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள், அவர்களின் சொந்தங்கள் மற்றும் அவர் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments