பிறவி மாற்றுத்திறனாளியை குணப்படுத்தும் விஜய்யின் திரைப்படங்கள்
- IndiaGlitz, [Tuesday,November 05 2019]
மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத ஒருசில நோய்கள் வித்தியாசமான சில முறைகளில் குணமாகும் அதிசயமாக அவ்வப்போது உலகின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. அந்த வகையில் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத பிறவியிலேயே வாய்பேச முடியாத, நடக்க முடியாத ஒரு சிறுவன், விஜய் திரைப்படங்களை தொடர்ந்து பார்ப்பதால் குணமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி என்ற பகுதியில் செபாஸ்டியன் என்ற சிறுவன் பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்து வந்துள்ளார். இந்த சிறுவனின் பெற்றோர்கள் தனது மகனுக்கு பல உயர்ரக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தும் குணமாகவில்லை
இந்த நிலையில் தற்செயலாக விஜய்யின் ’செல்பிபுள்ள’ ரிங்டோனை கேட்ட சிறுவனிடம் சில மாற்றம் ஏற்படுவதை பெற்றோர்கள் கண்டு பிடித்தனர். உடனடியாக சிறுவனின் பெற்றோர்கள் விஜய் நடித்த மற்ற திரைப்படங்களின் பாடல்கள், விஜய்யின் பஞ்ச் டயலாக்குகள் விஜய்யின் திரைப்பட காட்சிகள் ஆகியவற்றை செபாஸ்டியன் முன் போட்டுக் காட்டியுள்ளனர். இந்த படங்களையும் பாடல்களையும் பஞ்ச் வசனங்களை கேட்ட அந்த சிறுவனுக்கு மெல்ல மெல்ல பேச்சு வருவதாகவும், எழுந்து நடக்கவும் முயற்சி செய்வதாகவும் பெற்றோர்கள் கூறியுள்ளனர். இந்த தகவலை கேட்டு மருத்துவர்களே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
விஜய்யின் மேஜிக் ஒரு மாற்றுத்திறனாளியை குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருப்பதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.