close
Choose your channels

'தளபதி 67' படத்தின் நாயகி இவரா? விஜய்யுடன் 4வது முறையாக இணைகிறாரா?

Friday, June 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்த நடிகை ஒருவர் ’தளபதி 67’ படத்தின் நாயகி என்று கூறப்படுவதால் 4வது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் விஜய்யின் ’தளபதி 67’ என்றும் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்காக சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தளபதி விஜய்யுடன் ஏற்கனவே ’தெறி’, ‘கத்தி’ மற்றும் 'மெர்சல்' ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, 4வது முறையாக விஜய்யுடன் ’தளபதி67’ படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா ’குஷி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ‘ஷாகுந்தலம்’, ‘யசோதா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment